Wednesday 22 June 2016

Varagu Pongal

வரகு பொங்கல்


தேவையான பொருட்கள் :

வரகு 1கப், பயித்தம் பருப்பு 1/2 கப், எண்ணை தாளிக்க, கறிவேப்பிலை, சீரகம்,்மிளகு, பெருங்காயம், முந்திரி பருப்பு, உப்பு, நெய், இஞ்சி.

செய்முறை:  


வரகு, பயித்தம் பருப்பு தனிதனியாக வறுத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டையும் தண்ணீரில் கொட்டி 2 அல்லது 3 முறை நன்றாக களைய வேண்டும். 1க்கு 3 தண்ணீர் சேர்த்து குக்கரில் வைக்க வேண்டும். உப்பு சேர்த்து ஸ்டவில் வைக்க வேண்டும். முக்கால் பதம் வெந்தவுடன் குக்கரின் மேல் மூடி போட்டு 1 அல்லது 2 விசில் வந்தவுடன் நிறுத்த  வேண்டும்.
குக்கர் ஆறியவுடன் சிறிது நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து பொங்களில் போட வேண்டும். பின் எண்ணை விட்டு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயம் ஆகியவைகளை வறுத்து சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின் குறிப்பு: இதே செய்முறை சிறுதான்யங்கள் தினை, குதிரைவாலி, சாமை அனைத்திற்கும் பொருந்தும். ஒவ்வொரு சிறுதான்யத்தை பொறுத்து தண்ணீரின் அளவு மாறுபடும் எனவே சிறுதான்யத்தை குக்கரில் சேர்த்து பாதி வெந்த பிறகு தண்ணீர் போதவில்லை எனில் சிறிது வெந்நீர் சேர்த்து குக்கர் மூடி போட்டு விசில் போட வேண்டும், தண்ணீர் போதும் எனில் அப்படியே குக்கர் மூடி போட்டு விசில் போட வேண்டும்


Samai millet paruppu usili சாமை பயித்தம் பருப்பு உசிலி

சாமை பயித்தம் பருப்பு உசிலி

தேவையான பொருட்கள் : 

சாமை 1கப், பயித்தம் பருப்பு 1/2 கப், எண்ணை தாளிக்க, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்,  வர மிளகாய், உப்பு.  


செய்முறை:  


           சாமை, பயித்தம் பருப்பு தனிதனியாக வறுத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டையும் தண்ணீரில் கொட்டி 2 அல்லது 3 முறை நன்றாக களைய வேண்டும். குக்கரில் 2 ஸ்பூன் எண்ணை விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்,  வர மிளகாய் தாளித்து 1க்கு 2.5 பங்கு தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு போட்டு குக்கரில் வைக்க வேண்டும். முக்கால் பதம் வெந்தவுடன் குக்கரின் மேல் மூடி போட்டு 1 விசில் வந்தவுடன் நிறுத்த  வேண்டும்.  இதற்க்கு 
பொங்களை விட தண்ணீர் குறைவாக இருக்க வேண்டும். இது பொலபொலவென்று இருக்கும். (சாமையை வறுத்து சேர்ப்பதால் வாசமாக இருக்கும்)

இதில் வெங்காயம் பூண்டு, கிழங்கு வகைகள் எதுவும் இல்லை.  எனவே இது Jain food ஆகும்.

Tuesday 24 May 2016

Boiled rise flour ball

This is my first blog page. So I started with one sweet which is mostly liked by Tamil Jains.

This is the traditional food of the people of Tamil Jain. They prepare for it during the fasting period,  and they go out of native.

Ingredients: Boiled rice, jaggery, milk

Method: Boiled rice should  be cleaned  using white cloth. Grate and  keep jaggery.  Put the rice into thava roast it until  puffed  (color changed and puffed  slightly). After this, put the flour milling machine to grind and store it.  Flour, grated jaggery and mashed with milk eaten by holding round.   If you want to add the fried cashews with this. It  gives us the necessary energy.
    
பொறி அரிசி மாவு உருண்டை

இது தமிழ் ஜைன மக்களின் பாரம்பரிய உணவுஇது விரத காலத்தின் பொழுதும் , வெளியில் செல்லும் பொழுதும் சாப்பிடுவார்கள்

தேவையான பொருள்கள் : புழுங்கல் அரிசி, வெல்லம், பால்.

செய்முறை:  புழுங்கல் அரிசியை நன்றாக வெள்ளை துணியால் துடைத்து வைத்து கொள்ள வேண்டும்வெல்லத்தை துருவி அல்லது சீவி வைத்துகொள்ள வேண்டும். அடுப்பில்வாணலியை  வைத்து அரிசியை பொறியும் வரை (நிறம் மாறி பொறிந்து சற்று உப்பி வரும்) வறுத்து ஆற விட வேண்டும்பின் இதை மாவு அரைக்கும் இயந்திரத்தில் கொடுத்து அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.  தேவையனில் சிறுவர்களுக்கு நெய்யில் வருத்த முந்திரி சேர்த்து கொடுக்கலாம்இது பசியை போக்கும், நமக்கு தேவையான சக்தியை கொடுக்கும். மாவு, துருவிய வெல்லம் மற்றும் பால் சேர்த்து பிசைந்து உருண்டையாக பிடித்து சாப்பிடலாம்.